• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

Mathavi by Mathavi
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!
Share on FacebookShare on Twitter

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மையான குற்றவாளிகளையும் அதன் பின்னணியையும் வெளிக்கொண்டு வரும் தற்போதைய அரசின் இந்த நேர்மையான முன்னெடுப்புகளுக்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அப்பழுக்கற்ற இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் இருந்தது என்பது உண்மைதான். இல்லாவிட்டால், வெளியில் இருந்து எவர் தூண்டிவிட்டாலும் கூட, தற்கொலை குண்டுதாரியாக மாறும் அளவுக்கு யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், இந்த ஒருசில தீவிர அடிப்படைவாதிகள் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் மக்களையும் எவ்விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

உண்மையில், இந்த தீவிரவாதக் குழுக்கள் குறித்துப் பல முஸ்லிம் சமூக, மதப் பிரமுகர்கள் உரிய காலப்பகுதியில், மிகுந்த பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்கு எழுத்துமூலமாகத் தெளிவான தகவல்களை வழங்கியிருந்தனர். நபர், இடம் உள்ளிட்ட துல்லியமான விவரங்கள் பொலிஸாரிடம் இருந்தன.

எனவே, இந்தத் தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்ட வெறியர்களை முன்கூட்டியே கைது செய்து விசாரிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் போதிய அவகாசமும், ஆதாரங்களும் இருந்தன. அவர்களைக் கைது செய்து, தீவிரவாத ஒழிப்புப் புனர்வாழ்வு வழங்கிப் பாரிய விபரீதத்தைத் தடுத்திருக்கவும் வாய்ப்புகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகளும் காத்திரமான எச்சரிக்கைத் தகவல்களை உரிய நேரத்தில் வழங்கியிருந்தன.

இருப்பினும், உரிய கைதுகளையோ, விசாரணைகளையோ அல்லது தடுப்பு நடவடிக்கைகளையோ முன்னெடுக்க எமது பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறைகள் திட்டமிட்டுத் தவறிவிட்டன. அதன் விளைவாகவே குண்டு வெடித்துப் பாரிய விபரீதங்கள் நிகழ்ந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. ஆகவே, அந்தப் பொறுப்பான அதிகாரிகள் ஏன் ‘கடமை தவறினர்?’ என்பது முதலில் கண்டறியப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சுரேஷ் சலே, பல இலங்கையர்களைக் கைது செய்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்து விசாரித்துள்ளார். ஆகவே, சட்டபூர்வ விசாரணை என்பது அவருக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. இப்போது விசாரணைக்கு அஞ்சி அவர் ஒரு பச்சை குழந்தையைப் போல் நடிக்கக் கூடாது.

கடந்த போர்க் காலத்தில் அவர் ஒரு தேசப்பற்றாளராகப் பணியாற்றினார் என்று கூறப்படும் கதைகள், இன்று அவரைப் பாரபட்சமின்றி விசாரிப்பதைத் தடுப்பதற்கான காரணங்களாக அமைய முடியாது. உண்மையில், சுரேஷ் சலேயிடம் இருந்தது ‘தேசப்பற்றா’ அல்லது ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் ‘வேறெந்த பற்றா’ என்பது இந்த விசாரணைகளின் மூலம் வெளிவர வேண்டும்.

அதேவேளை, இன்றைய புதிய விசாரணைகளுக்குத் தலைமை தாங்கும் உயர் அதிகாரிகளான ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் புதிதாக வந்தவர்கள் அல்லர். இந்த விபரீதங்கள் நிகழ்ந்த காலகட்டத்திலும் அவர்களே பொறுப்பான பதவிகளில் இருந்தனர்.

ஆகவே, அன்று அவர்களைச் சுதந்திரமாகப் பணியாற்றவிடாமல் தடுத்த அந்த ‘மர்மக் கரம்’ எது என்பதும், இவற்றுக்குப் பின்னால் உள்ள மாபெரும் சூத்திரதாரி யார் என்பதும் சட்டத்தின் முன் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

மரை இறைச்சியுடன் இருவர் கைது.!

by Mathavi
June 15, 2026
0

பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர். பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை...

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

by Mathavi
June 15, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய...

கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

தம்பதியினர் மர்மமாக உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் மேல் மாடியில் வசித்து வந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த...

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 15, 2026
0

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 15, 2026
0

பகுதியளவில் தீப்பரவல் ஏற்பட்ட லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆர்.பி.கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

by Mathavi
June 15, 2026
0

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

by Mathavi
June 15, 2026
0

இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி...

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

by Mathavi
June 15, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி