உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ‘இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா அவர்களுக்கு கரவெட்டி கிழக்கு சிவனேசன் பொதுநோக்கு மண்டபத்தில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

சிவனேசன் பொதுநோக்கு மண்டப தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு அன்னாரது கலைச் சேவையையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு. வேந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி, பாரதிராஜாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சிவனேசன் பொதுநோக்கு மண்டப உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு. வேந்தன் அவர்கள், இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் திரைத்துறைப் பங்களிப்புகள் மற்றும் அவரது கலைப்பயணம் குறித்த நெகிழ்ச்சியான நினைவுரையை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கழகப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0