• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பலத்தைக் காட்டுமாறு அரசுக்கு எதிரணி சவால்.!

Mathavi by Mathavi
June 14, 2026
in இலங்கை செய்திகள்.
0
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பலத்தைக் காட்டுமாறு அரசுக்கு எதிரணி சவால்.!
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எமது நாட்டின் பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளன என்றும், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சவால் விடுத்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகவும் விலைகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆட்சிக்கு வந்தன. ஆனால், தற்போது எரிபொருள் விலையைப் பெருமளவில் உயர்த்தியுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை ஒரேடியாக 43 சதவீதத்தால் அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 140 பில்லியன் ரூபாய் இலாபமீட்டிய இலங்கை மின்சார சபை, தற்போதைய அரசின் மோசமான நிர்வாகத்தால் 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களின் மூன்று நேர உணவில் ஒரு நேர உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் தவறான கொள்கைகளால் டொலரின் மதிப்பு சில மாதங்களுக்குள் 50 ரூபாவால் உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையால் நாட்டின் கடன் சுமை ஒரேடியாக 2 ஆயிரம் பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்கும்போது 93 பில்லியனாக இருந்த நாட்டின் கடன் சுமை, தற்போது எவ்வித அபிவிருத்தியுமின்றி 107 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனது. அந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால், மேலதிகமாக ஒரு டீசல் கப்பலை நாட்டுக்குக் கொண்டுவர நேரிட்டது. கடந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் இறக்குமதிக்கு 1,500 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுக்குள்ளேயே 1,500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை வீணடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 527 அரச நிறுவனங்களில் கட்டுமானத்துறை போன்ற போட்டித்தன்மை வாய்ந்த சந்தையைக் கொண்ட நிறுவனங்கள் 709 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 23 பில்லியன் ரூபாவை அரசு வழங்கிய போதிலும் அது 25 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்களைப் பராமரிப்பதற்காக மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 103 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

கடந்த 2024 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், அரசால் அதற்குப் பதிலளிக்க முடியாமல் கால அவகாசம் கோரியது. கொழும்பு பங்குச்சந்தைக்கு வந்த 10 மில்லியனைத் தவிர வேறு எந்தவொரு டொலரும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

அரசு கூறியது போல மக்களின் வாழ்க்கையை வளமாக்கியுள்ளதா என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. எனவே, வெற்றுப் பொய்ப் பிரசாரங்களைச் செய்யாமல் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Posts

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி.!

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி.!

by Mathavi
June 14, 2026
0

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ‘இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா அவர்களுக்கு கரவெட்டி கிழக்கு சிவனேசன் பொதுநோக்கு மண்டபத்தில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிவனேசன் பொதுநோக்கு மண்டப...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

ஒரே நாளில் 926 சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

'முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று சனிக்கிழமை மாத்திரம்...

அடக்குமுறைச் சட்டமூலத்தால் ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து.!

எல் – நினோ, லா – நினா காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுங்கள்.!

by Mathavi
June 14, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எல்-நினோ மற்றும் லா-நினா காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கு, அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த விசேட ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக...

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

by Mathavi
June 14, 2026
0

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண...

காலிமுகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்தது ‘சங்கமம் 2026’

காலிமுகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்தது ‘சங்கமம் 2026’

by Mathavi
June 14, 2026
0

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின்...

வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்.!

வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்.!

by Mathavi
June 14, 2026
0

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு...

செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு.!

செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு.!

by Mathavi
June 14, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, சிறுவர்களின் 4 எலும்புக்கூடுகளும், குழந்தையின் ஓர் எலும்புக்கூடும் உட்பட...

நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!

நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!

by Mathavi
June 14, 2026
0

நடுவீதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் மறே மஸ்கெலியா பிரதான சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் இடம்பெற்று உள்ளது. இரத்தினபுரி பகுதியில்...

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.!

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.!

by Mathavi
June 14, 2026
0

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் ஒன்று நேற்று (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது....

மயிலிட்டி மக்களால் போராட்டம்; ஆதரவு வழங்குமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.!

மயிலிட்டி மக்களால் போராட்டம்; ஆதரவு வழங்குமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.!

by Mathavi
June 14, 2026
0

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி