• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

காலிமுகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்தது ‘சங்கமம் 2026’

Mathavi by Mathavi
June 14, 2026
in இலங்கை செய்திகள்.
0
காலிமுகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்தது ‘சங்கமம் 2026’
Share on FacebookShare on Twitter

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் அயராத முயற்சியினாலும், வழிகாட்டலாலும் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா, கொழும்பு காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாகப் படைத்துள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற ‘அயலக தமிழர் மாநாட்டில்’ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலிடேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கே. தினேஷ்குமாரின் நெறியாள்கையில் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இத்துறையில் படைக்கப்பட்ட உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்த நிலையில், இன்று காலை அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 988 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, முந்தைய சாதனையை மிக பிரம்மாண்டமான முறையில் முறியடித்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை காலிமுகத்திடலில் இயற்கை அலைகளின் ஓசையையும் மிஞ்சும் வகையில், இந்த 4 ஆயிரத்து 988 கலைஞர்களின் கால்களில் கட்டப்பட்டிருந்த 9ஆயிரத்து 976 சலங்கைகள் ஒரே தாளத்தில், ஒரே நேர்த்தியில் ஒலித்து உலகையே வியப்பில் ஆழ்த்தின. தமிழ் கலாசாரத்தின் தொன்மையையும், பரதநாட்டியத்தின் நுணுக்கங்களையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ நடுவர் ரிஷி நாத் கலந்துகொண்டு, இந்தச் சாதனையை நேரில் ஆய்வு செய்து சான்றிதழை வழங்கினார். “நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரபூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் வைத்து கையளித்தார்.

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்குக் கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், “தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை உலகறியச் செய்யும் நோக்குடனேயே இந்த உலக சாதனை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு காலிமுகத்திடலில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சர்வதேச அளவிலான பிரம்மாண்ட நிகழ்வுகளின் மூலம் உலக மக்கள் அனைவரது கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பும்.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சர்வதேசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது கணிசமாக அதிகரித்து, நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் மேலும் வளர்ச்சியடைவதோடு, இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்துக்கொள்ளவும் இது ஒரு பெரும் ஏதுவாக அமையும் என நாம் திடமாக நம்புகின்றோம்.” – என்று தெரிவித்தார்.

இந்த அபூர்வ கலைக் காட்சியை நேரில் கண்டு இரசிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலிமுகத்திடலில் திரண்டிருந்தனர்.

இந்த விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புடன் இணைந்து, கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கலைத்துறை வித்தகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

சலங்கை ஒலியால் அதிர்ந்த கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை, இலங்கைத் தமிழர்களின் கலைத்திறனுக்கும், கலாச்சார ஒற்றுமைக்கும் என்றும் அழியாத ஒரு சான்றாக உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Related Posts

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி.!

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி.!

by Mathavi
June 14, 2026
0

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ‘இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா அவர்களுக்கு கரவெட்டி கிழக்கு சிவனேசன் பொதுநோக்கு மண்டபத்தில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிவனேசன் பொதுநோக்கு மண்டப...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

ஒரே நாளில் 926 சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

'முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று சனிக்கிழமை மாத்திரம்...

அடக்குமுறைச் சட்டமூலத்தால் ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து.!

எல் – நினோ, லா – நினா காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுங்கள்.!

by Mathavi
June 14, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எல்-நினோ மற்றும் லா-நினா காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கு, அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த விசேட ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக...

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பலத்தைக் காட்டுமாறு அரசுக்கு எதிரணி சவால்.!

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பலத்தைக் காட்டுமாறு அரசுக்கு எதிரணி சவால்.!

by Mathavi
June 14, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எமது நாட்டின் பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச்...

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

by Mathavi
June 14, 2026
0

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண...

வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்.!

வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்.!

by Mathavi
June 14, 2026
0

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு...

செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு.!

செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு.!

by Mathavi
June 14, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, சிறுவர்களின் 4 எலும்புக்கூடுகளும், குழந்தையின் ஓர் எலும்புக்கூடும் உட்பட...

நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!

நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!

by Mathavi
June 14, 2026
0

நடுவீதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் மறே மஸ்கெலியா பிரதான சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் இடம்பெற்று உள்ளது. இரத்தினபுரி பகுதியில்...

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.!

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.!

by Mathavi
June 14, 2026
0

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் ஒன்று நேற்று (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது....

மயிலிட்டி மக்களால் போராட்டம்; ஆதரவு வழங்குமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.!

மயிலிட்டி மக்களால் போராட்டம்; ஆதரவு வழங்குமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.!

by Mathavi
June 14, 2026
0

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி