உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

நடுவீதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மதியம் மறே மஸ்கெலியா பிரதான சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் இடம்பெற்று உள்ளது.

இரத்தினபுரி பகுதியில் இருந்து மஸ்கெலியா மறே தோட்டத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள் நிகழ்வு முடிந்த பின்னர் மீண்டும் இரத்தினபுரி நோக்கி பயணித்த வேளையில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட பிரதான சாலையில் தடம் புரண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூன்று பெண்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை உடனே அப் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவர்களில் மறே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏனைய இரண்டு பேரும் சிறு சிறு காயங்களுடன் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0