சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.
சர்வதேச அளவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் முல்லைத்தீவு சிறார்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ICAM Abacus இன் சர்வதேச அளவிலான மனக்கணிதப் போட்டி 04.06.2026 அன்று மலேசியாவில் நடைபெற்றது.
இதில் 13 நாடுகளில் இருந்து வந்த 2500 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினார்கள்.
இவர்களில் 45 மாணவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தனர்.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிளையில் இருந்து 4 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் leval- 1B பிரிவில் துஷ்யந்தன் காருஜன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் junior level இல் ஜெ.பார்த்திவ் , ச.நக்சவி ஆகியோர் முதலாம் இடத்தையும் p.தன்விஸ் இரண்டாம் இடத்தினையும் பிடித்துள்ளனர்.
