உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

புத்தளம் மாவட்டம், ஆனமடுவ – முதலக்குலிய பகுதியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய போனேன் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டுக்காக வந்த குழுவினரே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர். வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் லொறியில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியுள்ளார். விபத்து நடந்த தருணத்தில் லொறியில் மொத்தம் 13 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தால் காயமடைந்த 13 பேரும் உடனடியாக ஆனமடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மேற்படி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த ஏனைய 12 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஆனமடுவ வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லொறி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0