உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலக்கிய, கலை வெளிப்பாட்டுச் சுதந்திரங்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது சட்டவல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கலைஞர் சங்கீதனை நேரில் சந்தித்து அவரது நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், இக்கைது நடவடிக்கை ஒருவருடைய அடிப்படை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இதற்கு எதிராக மிக விரைவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0