தனது இரண்டரை மாதக் குழந்தையைக் கிணற்றுக்குள் வீசி எறிந்த தாய் ஒருவர் எல்பிட்டிய, கஹதூவை, துடுவெகொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான தாய், தனது குழந்தையைக் கிணற்றில் வீசிய பின்னர், தானே “குழந்தையைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டேன்” என கூச்சலிட்டுள்ளார்.
இதனைக் கேட்டு உடனடியாகச் செயற்பட்ட அவரது கணவர், கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த குழந்தையை மேலே எடுத்து, அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இதனால் அந்தக் குழந்தையின் உயிர் அதிர்ஷ்டவசமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் நிலைமை தற்போது பாரதூரமானதாக இல்லை என்றும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமற்ற ஒன்றாக இருந்தமையினாலேயே, குழந்தையை மிக விரைவாகக் காப்பாற்ற முடிந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.










