உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க மற்றும் பாதுக்க பிரதேசங்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேசத்துக்கும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, ஹொரண, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்துக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கும் இரண்டாம் கட்ட (மட்டம் 2 – அவதானம் செலுத்துமாறு) மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் மத்துகம பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்துக்கும் முதலாம் கட்ட (மட்டம் 1 – விழிப்புடன் இருக்குமாறு) மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0