உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கரடியனாறு பொலிஸ் சிறைக்கூடத்தில் உயிரிழந்த கைதி கசிப்பு வழக்கில் கைதானதாக தகவல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொலிஸ் சிரைக்கூடத்தில் உயிரிழந்த நபர் சாட்டவிரோத மதுபான வழக்கில் கைதானவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு சிறைக்கூடத்தில் உயிரிழந்தவராவார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் சந்தேகநபரைக் கரடியனாறு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று  அதிகாலை 4.30 மணியளவில் சிறைக்கூடத்துக்குள் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0