உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அம்பாறையில் அழகான கடற்கரை செயற்றிட்டம் முன்னெடுப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில்  ‘அழகான கடற்கரை’ என்ற செயற்றிட்டம்  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ‘அழகான கடற்கரை’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் இவை முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் இத் திட்டம் இலங்கை இராணுவத்தின்  18வது விஜயபாகு காலாட்படையணி  ஏற்பாட்டில்  இன்று   காலை  7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.

“கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஏற்பாட்டில் இடம்பெற்ற  இச்சிரமதானப்பணியில் பிரதேச பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள். இளைஞர் கழகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா, 18வது விஜயபாகு  காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும்  சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் அமைப்பினரும் இதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0