உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மல்வானை வீட்டை மாணவர்கள் கைப்பற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன்?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“மல்வானையில் உள்ள அரச சொத்தான வீட்டை மாணவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை அரசின் அனுசரணையை அப்பட்டமாகக் காட்டுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.

பஸில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டை பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்றமை குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:- “அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் மாணவர்கள் அந்த வீட்டைத் தமக்குள்ளே துப்புரவு செய்து, எந்தப் பிரச்சினையும் இன்றி தங்கியிருக்கின்றார்கள்.

அரச சொத்தாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மாணவர்கள் அங்கு அத்துமீறிச் செல்லும் வரை பொலிஸார் வேடிக்கை பார்த்திருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தச் செயல் ஒரு பயங்கரவாதச் செயலாகும். இது மிக மோசமான முன்மாதிரியாகும். இவ்வளவு பெரிய அத்துமீறல் நடந்தும், பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அரசோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. இது அரசின் பின்னணி உதவியையே உறுதிப்படுத்துகின்றது.

323 கொள்கலன்கள் விடுவிப்பு மற்றும் திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி என அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் எதற்கும் உருப்படியான நடவடிக்கை இல்லை. பாரிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் இன்று என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றார்கள்.

ஜனநாயக நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு இடமளிப்பது நாட்டின் எதிர்காலத்தைச் சீரழிக்கும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசிடம் கடும் கேள்விகளை எழுப்புவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0