உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செட்டிகுளம் பிரதேசக்கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக, செட்டிகுளம் அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தையும், செட்டிகுளம் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு வண. ராஜீ சர்மா ஐயாவும் தீபச் சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், வவுனியா மாவட்ட கட்சியின் துணைத் தலைவருமான பாலச்சந்திரன் சிந்துஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் பத்மசீலன் ஜெகன், மற்றும் செட்டிகுளம் பிரதேசத்திற்கு பல கல்வித் திட்டங்களை முன்னின்று செய்துவரும் சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன் அவர்களும் அவரது பாரியாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செட்டிகுளம் பிரதேச மக்கள், உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் திரண்டு, 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் உணவின்றி, நீரின்றி, மருந்தின்றி மடிந்த உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

இறுதியில் கலந்துகொண்ட அனைவரும் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர். “மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்” என்ற முழக்கம் நிகழ்விடம் முழுவதும் எதிரொலித்தது. மக்கள் அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0