உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக மேல் கொத்மலை, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, கென்யோன், புரோட்லேன்ட் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

அத்துடன் மவுசாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 39 அடியும், 28 அடியும் நிறைய உள்ளன.

கன மழை பெய்து வருவதால் காட்மோர் ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா, சாமிமலை ஓயா என்பவற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மறே நீர்வீழ்ச்சி, காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் கனமழை பெய்து வரும் வேளையில் காட்டாறு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆறுகளில் நீராட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கண்டி பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழுப்பு பிரதான வீதியிலும் மற்றும் மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியிலும் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது. அத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வாகனங்களில் உள்ள மின்குமிழ்களை மிளிரச் செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0