உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராம மக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அவர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 13.05.2026 நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப் பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த கல்விளான் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்த மக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.

அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலன் தரு நீண்டகாலப் பயிர்களும், அந்த மக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. எனவே அந்தக் காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள் இடித்தழிப்புச் செய்யப்பட வேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.

எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது. அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தோடு அந்த மக்களுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் பழைய வீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவாரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடுள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0