உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை – வியட்நாம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடையும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாமின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பான் வான் ஜியாங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு வியட்நாம் அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்கள் சார்ந்த விடயங்களில் இலங்கையின் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற வியட்நாம் உறுதிபூண்டுள்ளது என்று ஜெனரல் ஜியாங் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த வியட்நாம் தூதுக்குழுவினர், பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என்று மீண்டும் வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பில் வியட்நாம் தரப்பில் அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனரல் வு தான் வான் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும், இலங்கை தரப்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் இராணுவ இணைப்பு அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிராந்திய ரீதியில் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியான ஒரு பலமான கூட்டாண்மையை உருவாக்குவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0