உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8 ஆம் திகதி உலக செஞ்சிலுவை தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தியும் இந்நாளை நினைவுகூர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இந்த மரநடுகை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைமை அலுவலக வளாகத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவர் திரு. ச. திரவியராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் திரு. லின்ரன் – யாழ் கிளை இளைஞர் அணித் தலைவர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள், யாழ் கிளை இளைஞர் அணியினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இந்த நற்பணி நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

மனிதாபிமானப் பணிகளில் முன்னிற்கும் செஞ்சிலுவைச் சங்கம், இன்றைய உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பசுமைத் திட்டங்களை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0