உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு; விசாரணை அதிகாரிகள் மீது நாமல் சரமாரி குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்துக்கு முன்னர், விசாரணை அதிகாரிகளால் அவர் கடும் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப் போலி வாக்குமூலங்களை வழங்குமாறு கபில சந்திரசேனவுக்குப் புலனாய்வுப் பிரிவினர் கடும் அழுத்தம் கொடுத்தனர் என்றும் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

விசாரணை அதிகாரிகளின் தேவைக்கேற்ப வாக்குமூலங்களைப் பெறத் தவறினால், சிறையில் அடைக்கப்படுவார் என அவர் அச்சுறுத்தப்பட்டார் என்றும், இதனால் அவர் பாரிய மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும் நாமல் குறிப்பிட்டார்.

அரசு தனது அரசியல் தேவைகளுக்காகப் பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என்று குற்றம் சுமத்திய அவர்,

“குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், விசாரணைகளின் போது அச்சுறுத்தல், மிரட்டல் அல்லது பலவந்தமான முறையில் வாக்குமூலங்களைப் பெறுவது சட்டவிரோதமானது.

நிர்வாக அமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்படுவதன் மூலம் நீதியான விசாரணைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.” – என்றும் மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0