உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காத்தான்குடி எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் அவர்கள் நேற்று (02.04.2026) சனிக்கிழமை நள்ளிரவு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

தகவல்களுக்கு அமைவாக,
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த தனது மைத்துனரின் வலீமா நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில், பால்வத்த ஓடை மற்றும் நட்சத்திர சுற்றுச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் அவரை வழிமறித்த சாவிக்கொத்து சுயேட்சைக் குழுவினர் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான ஹம்ஸா கலீல் அவர்கள் முதலில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாவிக்கொத்து குழுவினர் தாக்கிவிட்டு உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0