உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அரசாங்கம் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த போதிலும், இந்த மாதம் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாக கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0