வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு நேரில் சென்று பார்வையிட்டார்.
வாழ்வாதாரத்தில் பின்தங்கியதாக தெரிவு செய்யப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு தலா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டப் பணிகள் அனைத்தும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் முன்னேற்றம் மற்றும் தரநிலைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் தவிசாளர் கள விஜயம் மேற்கொண்டு அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார்.
மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வவுனியா வடக்கு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக இந்த வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.










