உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் என்பதால் மக்கள் கலக்கமடையத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் நடைபெற்ற 55ஆவது ஏப்ரல் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர், குறித்த தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ‘பிரதான சூத்திரதாரி யார்?’ என்ற கேள்வியை முன்வைத்து சிலர் நூல் வெளியிடும் நிலையில், உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலைகளை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தாது என்றும், அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.










