உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிலக்கரி நெருக்கடியால் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயரக்கூடும் என்றும், அது மக்களுக்கு கடினமானதாக அமையும் என்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், எரிபொருள் தட்டுப்பாடு, வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.


மின்கட்டண திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் ஏற்கனவே 10 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, இந்த நெருக்கடியை சமாளிக்க மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0