உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் சிறுமிக்கு பா*லியல் தொல்லை; பௌத்த பிக்குக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
81 பார்வைகள்

யாழ். நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், நேற்று சனிக்கிழமை வீட்டுப் பாவனைக்காக விகாரைக்கு குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். இதன்போது, அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தரப்பால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரான பௌத்த பிக்குவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபர் சார்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியிருந்தார். விடயங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரான பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

80 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

67 0 0