உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நுவரெலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் நடு காட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்து வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும். காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது .

தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற விஷமிகளின் தீ வைப்புகள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து வரும் சகல நீர் ஊற்றுகளும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் உள்ளது.

வனப் பகுதிகளுக்கு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு உடன் அந்த பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு அல்லது அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

2 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0