• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஆரம்பிப்பு!

admin by admin
November 12, 2025
in இலங்கை செய்திகள்.
0
கொழும்பிலிருந்து முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஆரம்பிப்பு!
Share on FacebookShare on Twitter

கொழும்பிலிருந்து முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இன்று (12) காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை விவகாரத்தில் தமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை பார்ப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,’முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்மையால் முல்லைத்தீவில் மக்கள் பலரும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மக்களுடன், வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சேவையாற்ற வருகின்ற வைத்தியர்கள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

அத்தோடு இவ்வாறான போக்குவரத்தே இடர்பாடுகள் இருந்தமையால் வெளிமாவட்டங்களை சேர்ந்த வைத்தியர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு வருகைதந்து பணியாற்றுவதில் அதிக நாட்டம் கொள்ளாத நிலையும் காணப்பட்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் என்னிடம் பல தரப்பினரும் முறையீடுகளை செய்திருந்தனர்.

அதற்கமைய கடந்த 29.05.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டுமென என்னால் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குறித்த தீர்மானத்தினை உரிய அமைச்சிற்கும் அனுப்பி வைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 22.07.2025 நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இந்த முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவேண்டுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தேன்.

அவ்வாறு என்னால் வலியுறுத்தப்பட்டதையடுத்து குறித்த பேருந்து சைவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்க அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், ஆய்வறிக்கைகள் கிடைத்தவுடன் அதனை பார்த்து குறித்த பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படுமெனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 09.10.2025 அன்று இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இத்தகைய சூழலில் கடந்த 15.10.2025 ஆம் திகதியன்று அமைச்சு மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டமொன்று இருப்பதாகவும், அக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிக்குள் முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையினை ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவினால் எனக்கு பதில் தரப்பட்டிருந்தது.

இவ்வாறாக ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிக்குள் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்பட்ட குறித்த சொகுசு பேருந்து சேவை குறித்த காலப்பகுதிக்குள் ஆரம்பிக்கப்படாத நிலையில், நாடாளுமன்றில் கடந்த 11.11.2025 அன்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதும் சொகுசு பேருந்து சேவை முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்படாத விடயத்தினையும் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தேன்.

இவ்வாறாக குறித்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தொடர்சியாக எம்மால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் பயனாக 12.11.2025 இன்று கொழும்பிலிருந்து காலை 08.30 மணிக்கு முல்லைத்தீவிற்கான குளிரூட்ட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 12.11.2025 இன்று இரவு 09.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதான மகிழ்ச்சியான செய்தியும் எமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த போக்குவரத்துச் சேவை இனி தொடர்ச்சியாக இடம்பெறும்.

எனவே எமது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, முல்லைத்தீவிற்கான சொகுசு பேருந்து சேவையை ஆரம்பித்த அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கு எமது முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.

Related Posts

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது முன்னாள் வடக்கு...

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

by selvan
June 17, 2026
0

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு...

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

by selvan
June 17, 2026
0

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

by selvan
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும்...

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

by selvan
June 17, 2026
0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக...

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

by selvan
June 17, 2026
0

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.இன்று...

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 17, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

by Mathavi
June 17, 2026
0

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது. ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த...

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 17, 2026
0

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி