• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாட்டில் வறுமை தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது!

admin by admin
October 13, 2025
in இலங்கை செய்திகள்.
0
நாட்டில் வறுமை தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது!
Share on FacebookShare on Twitter

“நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட்டத்தில் இல்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் 2028 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் 5 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறில்லை எனில் மீண்டும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், “சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நாட்டில் எல்ல மட்டத்திலும் எல்லா வகையிலும் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2028 இல் கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும். 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனை திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும். நமது நாட்டிற்கு கிட்டும் அந்நிய செலவாணி உயர் மட்டத்திலிருக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும். நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட்டத்தில் இல்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வறுமை அதிகரித்து, மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது.

நுகர்வு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேமிப்பு என்பனவும் குறைந்து வருகின்றன. இவை அனைத்தையும் உயர் மட்டத்தில் பேணிவர, பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களது சொத்துக்களும் உடமைகளும் ஏலம் விடப்படுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்காக் கொண்டு இந்த ஏலம் நிறுத்தப்பட்டாலும், அவர்களின் கடன்கள் மறுசீரமைக்கப்படவில்லை. முன்னைய அரசாங்கமும், இந்த அரசாங்கமும் வாக்குகளை தமக்கு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு ஏலத்தை இடைநிறுத்தியது.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள், இந்தக் கடன் பொறியில் சிக்கியுள்ள தொழில் உரிமையாளர்களால் தங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அவர்களின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும். இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டமும், தொலைநோக்கு பார்வையும், சிறந்த குழுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. பொருளாதாரத் திட்டமொன்று இல்லாததால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 2028 ஆம் ஆண்டாகும் போது ஆபத்தான சூழ்நிலை ஏற்படக்கூடும். இன்று நாடு வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே கிடைக்கின்றது.

மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கிட்டாது போகும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இந்த இலக்குகளை அடைந்து கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில், நாடு தனது கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும். 2022 இல் நாடு வீழ்ந்ததை போன்ற ஒரு சூழ்நிலைக்கு மீண்டும் விழுவதை நான் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில் நாம் சிக்காமல் இருக்க, பொருளாதாரம் வேகமாக முன்னேற்றம் காண வேண்டும். ஏற்றுமதிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் திட்டவட்டமான தேசிய பொருளாதார திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறானதொரு வேலைத்திட்டம் இல்லை. செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை, இதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி வீதம், அந்நிய நேரடி முதலீடு குறித்து நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன்.

ஆனால் இந்த அரசாங்கத்திடமிருந்து இன்னும் எந்த பதிலும் இல்லை. 2028 கடன் திருப்பிச் செலுத்துதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் கால அவகாசம் கோருகிறது. அவ்வாறெனில் இந்தப் பிரச்சினைக்கான பதில் அவர்களிடம் இல்லை. எனவே சரியான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இருந்தால், இதற்கு பதிலளிக்க நேரம் கோர வேண்டிய தேவையில்லை” என்றார்.

Related Posts

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

by selvan
May 31, 2026
0

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச்...

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

by selvan
May 31, 2026
0

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர்...

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 31, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி