• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாகவே தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுறுத்தலாம்!

admin by admin
September 10, 2025
in இலங்கை செய்திகள்.
0
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாகவே தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுறுத்தலாம்!
Share on FacebookShare on Twitter

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (08) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்க நாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அவ்விவாதத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கருத்துரைத்த பேர்ள் அமைப்பின் பிரதிநிதி, ‘இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 16 வருடங்கள் கடந்த பின்னரும் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி நினைவூட்டுகிறது’ எனச் சுட்டிக்காட்டினார். அத்தோடு 169,796 இற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்கள் மரணித்திருக்கக்கூடும் என நம்பப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என நினைவூட்டினார்.

‘தற்போதைய அரசாங்கம் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பினும், நாட்டில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் எதனையும் எட்டவில்லை. குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை என்பதுடன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் மற்றும் சிங்களமயமாக்கம் என்பன தொடர்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கமும் நல்லிணக்கம் எனும் சொல்லை வெறுமனே பயன்படுத்துகின்றதே தவிர, அதனை உண்மையில் அடைந்து கொள்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை’ எனவும் பேர்ள் அமைப்பின் பிரதிநிதி கரிசனை வெளிப்படுத்தினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சமூகம் உலகளாவிய நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும் எனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றின் ஊடாக சட்ட ரீதியான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ளவேணடும் எனவும் வலியுறுத்திய அவர், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் உறுதி செய்யப்படாதவிடத்து, நாட்டில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரமுடியாது எனத் தெரிவித்தார்.

Related Posts

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்.!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்.!

by Mathavi
May 25, 2026
0

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடைநிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை விமான...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இல்லை.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இல்லை.!

by Mathavi
May 25, 2026
0

இலங்கையில் தற்போது உள்நாட்டு ரீதியில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 330 ரூபாய் அளவில் மிகவும் ஸ்திரமடைந்துள்ளது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

by Mathavi
May 25, 2026
0

பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுணு மாவத்தையில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் விஹாரகம - திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த...

சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!

சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!

by Mathavi
May 25, 2026
0

மே 18 பத்தரமுல்ல தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம...

தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

by Mathavi
May 25, 2026
0

"மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று...

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 25, 2026
0

திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே...

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொ*லை வழக்கு குற்றவாளி உயிர்மாய்ப்பு.!

by Mathavi
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

by selvan
May 25, 2026
0

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனத்தைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி நகர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி