• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு மிகப் பெரும் கறை.!

Mathavi by Mathavi
August 5, 2025
in இலங்கை செய்திகள்.
0
சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு மிகப் பெரும் கறை.!
Share on FacebookShare on Twitter

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷ தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சோமரத்ன ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் போகம்பரை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்து அவரிடம் பல விடயங்களை கேட்டறிந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அது தொடர்பான நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது இவ்வாறு இருக்கையில் சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ஷ மட்டுமே உள்ளார்.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது, உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர். எனது கருத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் கருத்துகளோடு இணங்குகின்றது.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு. அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ஷ ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார்.

சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்திலேயே பல மர்ம முடிச்சுகள் அவிழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. செம்மணி புதைகுழி குறித்து நீதியோடும், நியாயத்தோடும் செயல்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் செம்மணி விவகாரம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த முன்வரும் சோமரத்ன ராஜபக்சவை காப்பாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது.

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

யுத்தத்தின் போது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈழத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவற்றினை தென்னிலங்கை தரப்புகள் தொடர்ச்சியாக மறுத்து வந்ததே வரலாறு. இன்று அவர்களது பகுதியில் இருந்தே ஒருவர் வாக்குமூலம் அளிக்க முன்வருகின்றார். அவர் தன் சார்ந்த முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்படும் சூழலில், வடக்கில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதனை தென்னிலங்கை சமூகமும் அறிந்துகொள்ள முடியும்.

காலம் கனிந்து வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற இருப்பதால் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்போதாவது ஓரணியில் திரளுங்கள். கருத்து முரண் இல்லாமலும் தனி நபர் காழ்ப்புணர்ச்சியற்றும் ஒருமித்த குரலில் எம் மக்களது பேரிழப்பை, பெரும் வலியினை சர்வதேச அரங்கில் எடுத்துரையுங்கள்.

படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ தரப்பில் இருந்தே அதற்கான சாட்சியும் தற்போது கிடைத்திருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது ஒரு வரலாற்று தவறு மட்டுமல்லாது விடிவுக்காக போராடும் தமிழ் இனத்துக்கே நீங்கள் செய்யும் ஆகப்பெரும் துரோகமாக பார்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி