• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
August 5, 2025
in இலங்கை செய்திகள்., வரலாற்றில் இன்று
0
தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1958
தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

1806
பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816
பிரான்சிஸ் ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824
சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860
சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874
ஜப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884
விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906
ஈரானில் அரசியல் சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914
முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1916
முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சுயஸ் கால்வாயைத் தம்வசப்படுத்தினர்.

1926
அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944
இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944
இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949
எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1960
புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962
அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார்.

1963
பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1965
பாகிஸ்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய – பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1971
முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973
சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979
ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984
வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.

1989
நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.

1995
யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010
சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010
ஆப்கானித்தான், படாக்சான் மாகாணத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012
அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

Related Posts

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

by selvan
June 30, 2026
0

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

by selvan
June 30, 2026
0

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள்...

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

by selvan
June 30, 2026
0

வவுனியா வடக்கு - நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 29.06.2026இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த...

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

by selvan
June 30, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.ஜூன் 24 முதல் 30 வரை...

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

by selvan
June 30, 2026
0

புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

by selvan
June 30, 2026
0

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்...

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

by selvan
June 30, 2026
0

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து...

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

by selvan
June 30, 2026
0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர். அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும்...

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

by selvan
June 30, 2026
0

"மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு" என 'தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார். காலமான...

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி