1867
இலங்கையில் கண்டிக்கும் கொழும்புக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து பொதுமக்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1914
இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1800
பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1801
அமெரிக்கப் பாய்க்கப்பல் என்டர்பிரைசு லிபியாவில் திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
1834
பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876
கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38ஆவது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894
ஜப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன ஜப்பானியப் போர் தொடங்கியது.
1907
சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது.
1927
சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் குவோமின்டாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1933
பாசிசத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் ஜேர்மனி, ஆம்பர்கில் தூக்கிலிடப்பட்டனர்.
1936
பெர்லினில் 11ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்களை கிட்லர் ஆரம்பித்து வைத்தார்.
1944
இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1946
நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த ரஷ்ய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.
1950
குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1952
தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.
1960
பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1960
பாகிஸ்தான் நடுவண் அரசின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964
பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1966
டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1968
புரூணையின் 29ஆவது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.
1974
சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐ.நா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.
1980
அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
1988
இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
2004
பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர்.
2007
அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.
2008
உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
2008
உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.
















