• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர..!

admin by admin
July 28, 2025
in இலங்கை செய்திகள்., உலக செய்திகள்
0
மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர..!
Share on FacebookShare on Twitter

மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (28) பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த அநுரவுக்கு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மகத்தான வரவேற்பளித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு இட்ட பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் உத்தியோகபூர்வ புகைப்படங்கள் பிடிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அதன் பின்னர் ஜனாதிபதிக்கும், மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றங்களைக் கையாள்வதில், பரஸ்பர சட்ட உதவி வழங்குவதை முதலாவது ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2 ஆவது ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் இராஜதந்திரப் பயிற்சி அளிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தங்களை மாலைதீவு சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் மற்றும் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆகியோர் மாலைதீவுக்கான அரச விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

Related Posts

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

by Mathavi
June 27, 2026
0

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான விசேட பிரேரணை...

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

by Mathavi
June 27, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபாய் அதிகூடிய சந்தை மதிப்புடைய அரிய...

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறியுள்ளன...

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

by Mathavi
June 26, 2026
0

வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வவுனியா மாநகரசபையின் முதல்வரை, முதல்வர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கை. மக்களால்...

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
June 26, 2026
0

நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது...

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி 'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
June 26, 2026
0

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி