• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.!

Mathavi by Mathavi
July 8, 2025
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் டினேஸ், மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்டம் கடந்த நல்லாட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் முறையான தெரிவுகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த பகுதியில் 139க்கும் அதிகமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் 30 வீடுகளிலேயே மக்கள் குடியிருப்பதாகவும் ஏனைய வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலம் தொடக்கம் முறையான வீதிகள், குடிநீர் வசதிகள், வடிகான் வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதி மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பெருமளவான வீதிகள் மணல் வீதிகளாக காணப்படுவதனால் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடல் அருகில் காணப்படும் நிலையில் சுனாமி போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது கடல் பகுதியை நோக்கியே ஓடும் நிலை காணப்படுவதாகவும் மாற்றுவழி இல்லாத நிலையே உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புன்னைக்குடா – பாலமீன்மடு பிரதான வீதியை ஒட்டியதாக சத்துருக்கொண்டான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் தமது வீடுகளுக்கு வந்து வதிவதற்கு தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையில் பொதுப்போக்குவரத்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிரதான வீதியில் செல்லுவோரை நிறுத்தி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலைமையே காணப்படுவதாகவும் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு வேறு நபர்களுடன் அனுப்பிவிட்டு அச்சத்துடனேயே இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் குறித்த பகுதியில் நிலவும் தற்காலிக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக வீதிகளை புனரமைப்பதற்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இங்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று கைவிடப்பட்ட வீடுகளில் மீளகுடியமர்த்தவும் அப்பகுதியில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் ஊடாக நிரந்தரமான வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

by selvan
June 28, 2026
0

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு நேரடியாக சட்ட நடவடிக்கை!

by selvan
June 28, 2026
0

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு...

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

by selvan
June 28, 2026
0

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

by selvan
June 27, 2026
0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி