• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வவுனியா வடக்கில் 600 ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்.!

Mathavi by Mathavi
July 6, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
வவுனியா வடக்கில் 600 ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்.!
Share on FacebookShare on Twitter

மகாவலி குடியேற்றத் திட்டத்தின் மூலம் வவுனியா வடக்கில் புதிதாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் 600 ஏக்கர் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மா, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் பிரதீபன் உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள், மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் குறித்த நிலங்களை சென்று பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தனர்.

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான வெடிவைத்தகல், திரிவைச்சகுளம் மற்றும் அதற்கு கீழான 600 ஏக்கருக்கும் மேலான வயல்க் காணிகள் சிங்கள மக்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வகையான காணி ஆவணங்களும் இல்லாமல் குறித்த காணிகள் எல்லையோர சிங்கள மக்களினால் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஆக்கிரமிப்பு மிக வேகமாக வெடிவைத்தகல்லு சந்தி வரை நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

குறித்த காணிகளை மகாவலி திட்டத்தின் கீழ் உள்வாங்கும் நோக்கோடு வனவளத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவுடன் காடுகள் அழிக்கப்பட்டு குறித்த நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிலமானது தமிழ் மக்கள் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் செய்த நிலங்களாகும். அவ் நிலங்களின் உரிமையாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு குறித்த காணிகளை துப்பரவு செய்த போது வனவளத் திணைக்களம் அவர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. அதன்பின் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு குறித்த காணி உரிமையாளர்கள் நிரபராதிகள் என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் காணிகளை துப்பரவு செய்ய பாதுகாப்பு தரப்பினரும், வனவளத் திணைக்களமும் அனுமதி வழங்காது தடையை ஏற்படுத்தி வந்திருந்தனர்.

தற்போது குறித்த இடங்கள் உள்ளடங்களாக 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டு பெரும்பான்மை சிங்கள மக்களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. கொக்கச்சான்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ ஆக மாறியது போன்று தற்போது திரிவைத்தகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சி மாறிய போதும் தென்னிலங்கை அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றம் வரவில்லை. எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் அணி திரண்டு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

by Mathavi
June 22, 2026
0

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி