• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும்.!

Mathavi by Mathavi
June 16, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன்வருவார்கள் என நம்புவதாக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளூராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்கள் தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

அதனடிப்படையில் ஒரு விடயத்தை மக்களுக்கும் போட்டியிட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கையாகவும், தெளிபடுத்தலையும் வழங்கும் வகையில் இந்த ஊடக சந்திப்பை மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை தவிர மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்களாக 4 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் நோக்கம் தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் செயல்பட்டு இருந்தோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் போட்டியிட்டது.

தேர்தலுக்கு முன்னர் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இணக்கப்பாடு ஏற்பட்டது. அதனடிப்படையில் நாங்கள் மன்னார் பிரதேச சபையில் தலைமன்னார் பியர் வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக தமிழரசுக் கட்சி வேட்பாளரை நியமிக்கவில்லை.

அதேபோல் மாந்தை மேற்கு பிரதேச சபையில் விடத்தல் தீவு இரட்டை தொகுதி வட்டாரத்தில் தமிழரசு கட்சி வேட்பாளரை நியமித்தால் டி.ரி.என்.ஏ.கட்சியினர் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால் அங்கும் நாங்கள் வேட்பாளர்களை போடவில்லை.

அதனடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் தேர்தல் முடிவு வந்த பிற்பாடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழரசுக்கட்சி தவிசாளரை நியமிக்குமாறும், தாங்கள் உப தவிசாளரை நியமிப்பதாகவும் கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை விதித்தார்கள்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரை தமது கட்சிக்கு வழங்கும் பட்சத்தில் தாங்கள் ஏனைய சபைகளில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்கள்.

தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடம் தமிழரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

மாந்தை மேற்கில் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யோசித்து விட்டு கூறுவதாக சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை. குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம்.

நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். எனவே மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களுக்கும் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.

இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவும், இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.

அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன்வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தொடர்பில் 2 வருடங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்க இலங்கை தமிழரசுக் கட்சி தயாராக இருக்கிறது.

எனவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன் வருவார்கள் என நம்புவதாக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

Related Posts

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 30, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

by selvan
May 30, 2026
0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

by Mathavi
May 30, 2026
0

2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 30, 2026
0

நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி