• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஏன் அம்மா எனக்கு மட்டும்? அம்ஷிகா

Mathavi by Mathavi
May 11, 2025
in இலங்கை செய்திகள்.
0
ஏன் அம்மா எனக்கு மட்டும்? அம்ஷிகா
Share on FacebookShare on Twitter
  1. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி அம்சிகாவுக்கு அந்த துயர்மிகு சம்பவம் 2024 ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது. அந்த சம்பவம் பற்றி அம்சஷிகாவின் தாயார் முதலில் முறைப்பாடு செய்தது அந்த கல்லூரி அதிபரிடம். அவர் இந்த முறைப்பாட்டிற்காக மேற்கொண்ட மேலதிக நடவடிக்கை என்ன?

2025/01/08 திகதி அன்று அந்த மாணவியை பலாத்காரம் செய்த அக் கல்லூரியின் கணித பாட ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யபடும் வரை அவர் அதே பாடசாலையில் எந்தவித விசாரணைக்கும் முகம் கொடுக்காமல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டது எவ்வாறு? சம்பவம் நடந்து 2 மாதம் கடந்தும் அப்பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுக்காமல் இருந்து ஏன்? நடவடிக்கை எடுக்காமலிருக்க ஏதாவது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா?

  1. இந்தச் சம்பவம் தொடர்பாக பம்பலபிட்டி பொலிசாரிற்கு முறைப்பாடு பதிவு செய்தது 2024/12/08 உடனடியாக அவர்கள் விசாரணையை ஆரம்பிக்கின்றனர். சட்டவைத்திய அதிகாரியிடம் அறிக்கை பெறப்படுகிறது. அந்த அறிக்கையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது பற்றிய உறுதியான அறிக்கை கிடைக்கபெற்றவுடன் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யபட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் சிறைப்படுத்தப்பட்டு 2025 /01/10 திகதி நிபந்தனை பிணையில் வெளிவருகின்றார்.
  2. பிணையில் வெளிவந்த நபர் மீண்டும் அதே கல்லூரியில் பணியை தொடருகிறார். குற்றம் புரிந்தவரும் பாதிப்பை எதிர்கொண்ட பிள்ளையும் அதே பாடசாலையில் இதை எவ்வாறு அதிபரால் அனுமதிக்க முடிந்தது?
  3. பெற்றோர் தெரிவிப்பதாவது, கல்லூரி முதல்வர் குற்றவாளியை பாதுகாத்துகொண்டு பாதிப்பிற்கு முகம்கொடுத்த அந்த சிறுமியை தொடர்ச்சியாக மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததனால் பிள்ளையில் நலன் கருதி மாணவியை அந்த கல்லூரியில் இருந்து கொட்டஹெனவில் உள்ள வேறு பாடசாலைக்கு மாற்றியதாக. அத்துடன் ஜனவரி மாதம் முதல் தனியார் மேலதிக வகுப்பிலும் இணைந்து கல்வி செயற்பாட்டில் ஈடுபட ஊக்குவித்ததாக..

5 அம்ஷிகாவின் பெற்றோர் இந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மேல் கூறும் குற்றச்சாட்டு என்னவெனில் அந்த நிறுவன ஆசிரியரால் ஏற்கனவே நடந்த பாலி யல் தொல்லை பற்றி அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் மீண்டும் அந்த சம்பவத்தை பிரபல்யப்படுத்தி அவமானப்படுத்தப்பட்டதாகவும், இந்த கடும் சொற்களை தாங்கிக் கொள்ள முடியா வேதனையினால் “குற்றம் செய்தவர்கள் நிம்மதியாக இருக்கும் போது அந்த பலாத்காரத்திற்கு முகம்கொடுத்த என்னை ஏன் இவர்கள் மீண்டும் மீண்டும் வேதனைப்படுத்துகின்றனர் “ குற்றம் செய்தவர்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? என கேட்டதாகவும்..

  1. இந்த சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட மனகுழப்பதில் இருந்து பிள்ளையை மீட்டெடுக்க உளவள ஆற்றுபடுத்தும் நிபுணரின் ஆலோசனையையும் பெற்றிருந்ததுடன், மேலதிக கல்வி நடவடிக்கையிலும் பிள்ளை கவனம்செலுத்த ஊக்கப்படுத்தியிருந்தனர். ஆனாலும் தனியார் கல்வி நிலையத்தில் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் ஏற்பட்ட அந்த அவமானம் அவரை இவ்வுலகை விட்டு நீங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டிருந்தது.

7 மீண்டும் மீண்டும் தான் அவமானபடுத்தப்படுவதை தாங்கி கொள்ளமுடியாத அந்த பிள்ளை 2025/04/29 அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தன்றுயிரை மாய்த்து கொண்டார்.

  1. நாமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில் அந்த பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த பிள்ளை போல் இன்னும் எத்தனை பிள்ளைகளின் உயிரிற்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளோம்?
  2. 2025/05/04 இந்த வேதனை சம்பவத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிபடுத்தியதன் பின்னர் அதாவது இரண்டு நாட்கள் கழித்து 2025/05/06 பெண்கள் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் 109 முறைப்பாட்டு இலக்கத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ததுடன் இது பற்றிய மேலதிக துரித நடவடிக்கைக்கும் பணித்துள்ளார். அத்துடன் 2025/05/08 அன்று அந்த பிள்ளைக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது எந்த அரசியல் கட்சி சாராத போராட்டம் என்றே கூறலாம்.
  3. இந்த சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு சுமத்தபடுவது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மேல் என நாடாளுமன்றில் பேசப்பட்டது. என்பதுடன் அது வாத பிரதிவாதங்களையும் தோற்றுவித்தது.
  4. ஆனாலும் இந்த பிள்ளையின் சம்பவம் பற்றி எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்திருக்கவில்லையா? அல்லது அதுபற்றிய தெளிவான அறிக்கை அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லையா? பெண்கள் சிறுவர் விவகார அமைச்சருக்கும் இதுபற்றிய முழு விபரமும் தெரியவில்லை. அல்லது அறிந்திருக்கவில்லை அத்துடன் பிரதமரும் இதைப் பற்றி தேடி அறிய முயலவில்லை.
  5. சிறுமி தன்னுயிரை மாய்த்து கொண்டது 2025/04/29 அன்று அதுவரை இராமநாதன் கல்லூரி ஆசிரியரிற்கு எந்த அமைப்பினரிடமிருந்தும் எந்த பிரச்சினைகளும் எழவில்லை. அம்ஷிகாவின் தாய் 2024/05/04 குற்றச்சாட்டை ஊடகங்களுக்கு பிரபல்யபடுத்தும் வரை குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் அதே பாடசாலையில் மாணவர்களுடனே இருந்துமிருக்கிறார்.
  6. பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தான் தாம் நடவடிக்கை எடுத்ததாக மக்கள் கூறுவதில் எந்த உண்மையுமில்லை என அரசு ஆணையிட்டு கூறுக்கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரிற்கு புத்தளத்தில் உள்ள இன்னுமொரு பாடசாலைக்கு இடம்மாற்றம் செய்யும் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுருந்தது. ஆனாலும் 2025/05/08 அன்று அதே பாடசாலையில் அவர் பணி செய்து கொண்டிருந்தார்.

ஆனாலும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் சந்தேகநபர் 2025/05/09 கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுகிறார்.

  1. இங்குள்ள முக்கியமான கேள்வி இந்த பிள்ளையின் தற் கொலை சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்ட இராமநாதன் மகளிர் கல்லூரி ஆசிரியரிடம் இதுவரைக்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையோ அல்லது கல்வி அமைச்சோ எந்த வித விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பதே!
  2. இறுதியில் பிரதமர் உரிய அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து விஷேட குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த செயலை அவர்கள் பக்கச் சார்பற்று செயற்படுத்துவார்களா? பெண்கள் சிறுவர் விவகார அமைச்சரை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துவதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு வருமா? பாதிக்கப்பட்டவர்களை விற்பனை செய்து குற்றவாளிகளை காப்பாற்றியது போல் அம்சிகாவின் மரணமும் தீர்வு இன்றி மூடப்படுமா?

அம்ஷிகா தன்னுடய தாயிடம் கேட்ட கேள்வியும் இதுதான் “ குற்றவாளிகள் நிம்மதியாக இருக்கும்போது பலாத்காரத்திற்கு முகம்கொடுத்து வேதனையில் தவிக்கும் எனக்கேன் மீண்டும் மீண்டும் இந்த வேதனை”

இதற்கான பதிலை எம்மில் எவராலும் வழங்கிட முடியாது.
ஆனால் எங்களால் கேள்விகளை கேட்க முடியும். இது எங்களின் ஒவ்வொருவரது மனதினையும் அழுத்தும் வினா. அரசும் அரச அதிகாரிகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்பதுடன் அமைச்சரை பதவி விலக அழுத்தம் கொடுப்பதிலும் பார்க்க எங்கே தவறு விடப்படுகின்றது என்று தேடுவோம். இனியொரு பிள்ளைக்கு இந்த கொடூரம் இடம்பெறாமல் இருக்க முயற்சி செய்வோம்.

அம்ஷிக்கா உன்னுடைய மரணம் சொல்லட்டும் பலருக்கு பாடம். அமைதியாக உறங்கட்டும் உன் ஆன்மா.

Related Posts

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

by selvan
June 27, 2026
0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில்...

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக
அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவு!

by selvan
June 27, 2026
0

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான...

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும்...

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

by Mathavi
June 27, 2026
0

வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி