• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.!

Mathavi by Mathavi
April 18, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.!
Share on FacebookShare on Twitter

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னாரிற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காற்றாலை விடயம் சம்பந்தமாக முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கி விட்டுச் சென்றுள்ளார். அவருடைய தகவலை பார்க்கின்ற போது கிராமத்து பழமொழியாக கொய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் என்கிறது ஞாபகம் வருகின்றது. அவரது கதையும் அவ்வாறே அமைந்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கிறது என்கிற செய்தியை அரசாங்கம் அரச அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அது மாத்திரம் இல்லாது 16-01-2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக குறித்த திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குறித்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் திட்டத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் ஜனாதிபதி நேற்றைய (17) கூட்டத்தில் தெரிவித்தார். திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நடைபெறவில்லை என்றும். தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. தாழ்வு பாட்டில் 10 காற்றாலைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகிறது. அதற்கான சுற்றாடல் மதிப்பு அறிக்கை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்த போது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை.

மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்த போது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை. மூன்றாவது திட்டமான கரையோரத்தில் இருந்து மணல் அகழ்வு செய்வதற்கான நில அளவீடு செய்வதற்கு அரச திணைக்களங்கள், அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான துரித நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிகின்றோம்.

குறித்த மூன்று திட்டங்களும் மன்னாரிலே நடைபெறுவதற்கும், நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குமான சூழலையே கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அவரது கட்சிக்காரர்கள் அல்லது அரச அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள்.

அல்லது ஜனாதிபதி இதனை அரசியல் மேடையாக பயன்படுத்துகின்றாரா என தெரியவில்லை. மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையிலே வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும்.

இடதுசாரித்துவத்தில் ஆட்சி நடத்துகின்றோம் என கூறுகின்றவர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை களத்தில் ஒன்று, வார்த்தைகளில் இன்னும் ஒன்றை என பேசுவது ஜனநாயக விரோதம் ஆகும்.

எனவே இவ்விடயங்களை ஜனாதிபதி உடனடியாக கவனத்தில் எடுத்து அவர் கூறியது போல் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைத்தபட்ச சூழல் பாதிப்போடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி இருந்தார். அரசு ஏமாற்றும் வார்த்தைகளாகவே பார்க்கின்றோம். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த கூடாது என கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் கருத்து குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

Related Posts

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

by selvan
July 2, 2026
0

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிளிநொச்சி நகர எல்லைக்குள் உள்ள ஒரு குழு கடை உரிமையாளர்களுக்கு...

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

by selvan
July 2, 2026
0

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு...

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

by selvan
July 2, 2026
0

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா...

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

by selvan
July 2, 2026
0

மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம்...

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

by selvan
July 2, 2026
0

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

by selvan
July 2, 2026
0

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

by selvan
July 2, 2026
0

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள்...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

by selvan
July 2, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

by selvan
July 2, 2026
0

கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை சுரேஷ் சலே, வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள்...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

by selvan
July 2, 2026
0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி