சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 40 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும், ஏனையவர்கள் மித்தெனிய மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுடன் வேன், முச்சக்கர வண்டி மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.