சிலாபம் – மாதம்பை, கலஹட்டியாவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பெண்களும், ஒரு வயது குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.