முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று 25.02.2025 பள்ளி முதல்வர் திரு. யோகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி ஜெயகாந்த் அவர்களும் ஆரம்ப உதவிக் கல்வி பணிப்பாளர் திருக்குமரன் அவர்களும் மற்றும் மதகுருமார்கள், இராணுவத்தினர், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் 50 மீட்டர், 75 மீட்டர் ஓட்டங்கள் என பல்வேறு வகையான விளையாட்டுகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


