இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மந்திகை மடத்தடியிங் அமைந்துள்ள வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று(19) மாலை இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
பொதுச் செயலாளராக நியமனமாகிய பின் முதலாவது கட்சியின் ஆலோசனைக் கூட்டம் என்பதனால் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் கூட்டம் ஆரம்பமானது.
கட்சியின் ஆதரவாளர்களால் எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கொளரவம் வழங்கி வரவேற்றனர்.


