வடக்கு மாகாண கடற்றோழில் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் செயற்குழு கூட்டம் இன்றைய யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
இதன் போது புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதுவரை தீர்க்கப்படவில்லை என்ற கருத்தினை முன்வைத்தனர்.
அத்துடன் கடல் தொழில் அமைச்சர் எதையும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மீனவர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் மீனவர்களின் பிரச்சனை, இந்திய ரோலர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் வடக்கிலிருந்து ஜனாதிபதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதற்கு தாம் தயார் என அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
மேலும் தற்போது பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதீட்டிலே கடல் தொழிலாளர் மீனவர்களுக்கு என எந்தவித ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் தொழிலை முன் கொண்டு செல்வதற்கும் எவ்வித பாதீடும் ஒதுக்கப்படவில்லை என்றும் இதன்போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார குறிப்பிட்டார்.
