2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஜனவரி மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் வாய்ப்பினை தவறவிட்டுள்ளார். அத்துடன் 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தையும் முன்னதாக தவறவிட்டிருந்தார்.
பும்ராவுக்கு பதிலாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஹர்ஷித் ராணா, இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடரில் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.