அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் படையினரின் பங்கேற்புடன் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் பாடசாலையின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வவுனியா பம்பைமடு பகுதியில் இருந்து வருகை தந்த இராணுவத்தினர், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலையின் சூழல், குடிநீர் விநியோகம், மலசலகூடம், மைதானம் என்பவற்றை சுத்தம் செய்து திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பாடசாலையில் அபாயமாக இருந்த மரங்களும் அகற்றப்பட்டன.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்கள் இந்த மாத ஆரம்பத்தில் பாடசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர், அவர் விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.





