சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள், விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(4) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புறாக்கள் (PIGIONS), ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த பாரவூர்தி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, தலைமன்னார் கடற்படைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப்பிரிவு இணைந்து மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பேசாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன் போது குறித்த பாரவூர்தியில் 220 புறாக்கள், 20 ஆபிரிக்க காதல் பறவைகள், 08 பறக்கும் அணில்கள் மற்றும் 30 மருந்து மாத்திரைகள், மருந்து திரவங்கள் அடங்கிய 40 போத்தல்கள், பாரவூர்தி மற்றும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பில் வசிக்கும்’ 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட விலங்குகள், பாரவூர்தி மற்றும் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
![](https://thinakaran.com/storage/2025/02/DERF-806x1024.jpg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.53-PM-1-771x1024.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.54-PM-771x1024.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.54-PM-1-1024x771.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.55-PM-1024x771.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.57-PM-1024x771.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.56-PM-1024x771.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-04-at-2.19.59-PM-1024x771.jpeg)