புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 108வது பிறந்தநாள் விழா நேற்று (27) பண்டதத்தரிப்பு – சாந்தை விநாயகர் கலையரங்கில் கொண்டாடப்பட்டது. சர்வதேச எம்.ஜி.ஆர் மன்றமும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கலையகமும் இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்தன.
யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவி வழங்கப்பட்டது, கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர், அனைத்து எம்.ஜி.ஆர் பேரவையினர், எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகத்தினர், கிராம சேவகர், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மற்று பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







