மீகொடை, பானலுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து சிதைவடைந்த நிலையில் சடலமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.