மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் நேற்று 17 ம் திகதி நள்ளிரவு 11 .45 மணிக்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இத் தீப் பரவலின் போது அந்தக் குடியிருப்பு பகுதியில் இருந்த ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் அதே தோட்டத்தில் உள்ள நூலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீப் பரவலினை கட்டுப்படுத்த தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்டநிர்வாகம், மஸ்கெலியா பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
தீப் பரவலினால் உடமைகள் முழுமையாக எரிந்துள்ளது.
இத் தீ பரவலின் போது உயிர் சேதங்கள் இல்லை எனவும் தீ பரவியது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 7 ஆண்களும், 15 பெண்களும், 5 பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.