யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறி சந்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தற்போது தாம் வியாபாரம் மேற்கொள்ளும் மரக்கறி சந்தை போதிய இட வசதி மற்றும் பஸ் தரிப்பிடம் உட்பட மீன் சந்தை ஆகியவற்றோடு சேர்ந்துள்ளதாகவும், புதிதாக அமைக்கப்பட்ட சந்தை சற்று தொலைவில் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுவதாகவும், அதே வேளை மரக்கறி சந்தைக்கான பாதை ஒரு வழிப்பாதையாகவுள்ளதாகவும், தெரிவித்ததுடன் தற்போது தாம் இருக்கும் மேல்த் தளத்திலிருந்து அதன் கீழ் தளத்திற்கு மரக்கறி சந்தையை மாற்றித்தருமாறும் இன்றைய தினம் மரக்கறி வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.